என்னிடம் இருப்பது எல்லாம் ஒருவரை நம்பும் மனது. பின் நம்பியவர்களிடமே ஏமாறும் அதே மனது . நான் யாரிடமும் " நான் யார் " என்றதை வெளிக்காட்டியதில்லை. எதற்காக காட்டிக்கொள்ள வேண்டும்?. என்ன தேவை இருக்கிறது?. நான் உன் மேல் இந்த அளவு அன்பு வைத்துள்ளேன் என்பதை என்னால் மௌனத்தை தவிர வேறு எந்த மொழியினாலும் எடுத்துரைக்க இயலாது. தெரிந்தாலும் அதை செய்வதினால் அது ஓர் நாடகமாகி விடுகிறது.ஒரு வார்த்தை கூட என் இருதயத்தில் இருந்து வெளி வர மறுக்கின்றது. அவளை எனக்கு பிடிக்கும் என்ற வாக்கியமே நாடகப் பேச்சு போல் தான் தோன்றுகிறது. என்னுடைய இயல்பும் இது இல்லை என்பதை நானே சில நேரங்களில் தான் உணர்கிறேன். அப்போது நான் என் மனதிடமும் இந்த சமுதாய போக்கின் தேவைகளுக்கும் இடையே என்ன பண்ணுவது என்று தெரியாமல் சிக்கித்தவித்து எங்கே செல்வது என்று தெரியாமல் பித்து பிடித்தவன் போல் மாறுகிறேன்.
வேகமாக இயங்குகிறேன். நானின்றி ஓர் அணுவும் அசையாது என்று நம்பிக்கொள்கிறேன். இதற்கெல்லாம் காரணம் நான் அவளின் மேல் வைத்த அன்பு மட்டுமே தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. அதை அவள் புரிந்துகொள்ளாமல் இருப்பது கண்டிப்பாக என் தவறு இல்லை. என் சுபாவத்தை மீறி என் இயல்பை மீறி ஒரு உண்மையை எடுத்துரைத்தாலும் அவள் வாழும் இந்த உலகமும் அவளை சுற்றி உள்ள இந்த கலைங்கர்களும் அதைபொய்யாகவே மதிப்பிடுகிறார்கள். அவளுக்கும் ஓதி உணர்தல் வியாதி இருப்பதால் உண்மை வட்டத்துக்கு வெளியேவே நிற்கிறது.

சத்தியம் ஜெயிக்கும். உண்மை உயிர்த்தெழும் என்று கூறிய சான்றோர்கள் இருந்த காலத்தில் பிறக்காமல் போனது என் தாய் தந்தை செய்த தவறு. போதித்தே தன்னை உணர்ந்தவர்கள் தன் போதனையை கேட்டவர்கள் பற்றி யோசித்துபார்பதுண்டா??... சைக்கோ கொலைகாரானாய் இருந்திருப்பேன்... இப்பொழுதும் மட்டும் என்ன ?... அப்படிதான் மாறுகிறேன். சூனியம் படைத்தவர்களும், அடி மனதிலேயே தாழ்மை உணர்ச்சி பெற்றவரர்களும் சகுனியாகத்தான் மாறுகிறார்கள். நீங்களும் மாறித்தான் போனீர்கள். உங்களைத்தான் கொலை செய்ய வேண்டும். கண்டிப்பாக கொலை செய்யவேண்டும். மெது மெதுவாக உங்களுக்கே தெரியாத நிலையில் உங்களின் உயிரை உங்களது உடலை விட்டு பிரித்து அனுப்ப வேண்டும். உங்கள் சமுதாயத்தில் இருந்து, உங்கள் உலகத்தில் இருந்து எனக்கு எதுவும் வேண்டாம். உரிமைப்போர்கள் எல்லாம் கொலைகளில் தான் முடிய வேண்டும் என்பது எனக்கான விதி. என் விதியை நான் மாற்றி அமைக்க விரும்பவில்லை. உங்களை கொலை செய்வதினால் என்ன பயன் என்பதை கொன்ற பின்பே தெரியும் . ஒருவேளை கொன்ற பின் உங்களில் யாருடைய இருதயமாவது நீ வைத்த அன்பு தானடா காரணம் என்று துடித்தால் நான் என்ன செய்வேன்...??? . என்னை கொலை செய்ய தூண்டியவளுக்கே என்னை கொலை செய்வதற்கு அனுமதி கொடுக்கிறேன்.
அவள் அவராகலாம் .......
அவள் அவராகலாம் .......